விபச்சார கும்பலை தட்டித் தூக்கிய போலீசார்

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத் தொழில் நடைபெறுவதாகப் புகார் எழுந்ததை அடுத்து, காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெண்களைக் காட்டி ரூ.1,500 முதல் 8,000 வரை கட்டணம் வசூலித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் போது ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர், பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மீட்கப்பட்டனர். ஹோட்டல் நிர்வாகத்தின் பங்கு குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕