சீமான் வீட்டுக்கு வந்த போலீசார் மீது தாக்குதல்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வந்த காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, விசாரணைக்கு வந்த போலீசாருக்கும் சீமான் வீட்டு காவலாளிக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதன்பின், காவலாளி துப்பாகி வைத்திருப்பதாக கூறிய நிலையில், துப்பாகி வைத்து மிரட்டுகிறாயா என போலீசார் கேட்டுள்ளனர். இதையடுத்து, அக்காவலாளியிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி