போக்கோ எப்7 ப்ரோ (POCO F7 Pro) மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா (POCO F7 Ultra) போன்கள் ரிலீஸாக உள்ளன. மார்ச் 27ஆம் தேதி குளோபல் மார்கெட்டில் இந்த போக்கோ எப்7 சீரிஸ் மாடல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில், தற்போது இந்த போனில் உள்ள அம்சங்கள் பற்றி தகவல் கசிந்துள்ளது. அதன்படி, இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன், 50 எம்பி மெயின் கேமரா உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 20 எம்பி செல்பீ ஷூட்டர், 6,000mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது