வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ள மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில், ராமதாஸ் பெயர் மற்றும் அவரது புகைப்படம் மட்டும் இடம்பெற்றிருந்தது. அன்புமணி புகைப்படம், பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ள அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் அன்புமணி கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.