திமுக கூட்டணியில் இணைய பாமக நிறுவனர் ராமதாஸும், தமமுக தலைவர் ஜான் பாண்டியனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பாமக அன்புமணி தரப்பு அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல், என்டிஏ கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஜான் பாண்டியன், திமுக கூட்டணியில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.