சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற தனியார் தற்காப்பு கலை நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி கலந்துகொண்டார். தற்காப்பு கலையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு 'கவுரவ பிளாக் பெல்ட்' மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, பெண் குழந்தைகள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்வது அவசியம். நாட்டில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு தற்காப்பு கலையை பயில வேண்டியது இன்றியமையாதது என்று தெரிவித்தார்.