தவெக கூட்டணிக்குள் பாமக வரப்போவதாக தகவல் பரவி வரும் நிலையில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் விசிகவின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, எந்த கூட்டணியில் பாமக இருக்கிறதோ அதில் விசிக இருக்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில், பாமக தவெக கூட்டணியில் இணைந்தால், விசிக அந்த கூட்டணியில் நீடிக்குமா அல்லது திமுகவுடன் மீண்டும் இணையுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.