பாமக பொறுப்பாளர் மர்ம மரணம்.. நடுரோட்டில் கிடந்த சடலம்

பாமகவின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவராக வழக்கறிஞர் சக்ரவர்த்தி (48) செயல்பட்டு வந்தார். இவர், நேற்று இரவு (ஜூன் 11) தலையில் காயங்களுடன் சாலையில் மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் இரவில் வீடு திரும்பியபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அரசியல் அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி