2026 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பாமகவில் தலைவர் அன்புமணிக்கும் நிறுவனருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் முதல் ஆளாக பாமகவின் மாம்பழம் சின்னத்திற்கு உரிமை கோரி ராமதாஸ் விண்ணப்பித்துள்ளார். இது இருவருக்குமிடையேயான மோதலை மேலும் அதிகரிக்கலாம் என கட்சியினர் பேசி வருகின்றனர். இரு தரப்பும் கோரினால் சின்னம் முடக்கப்படவும் வாய்ப்புள்ளது.