பாமக தலைவர் பதவித் தொடர்பாக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால், பாமகவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். விரைவில் மேலும் பலர் இணையக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பாமக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.