பாமக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை? உண்மையை உடைத்த ராமதாஸ்

விஜயின் தவெக நிர்வாகிகள் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தொடர்புகொள்ளவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்தவர் கூறுகையில், "பாமகவுடன் கூட்டணியில் இணையும் கட்சி குறித்த முடிவை நானே எடுப்பேன். கைத்தடி ஊன்றும் நிலைமை வந்தாலும் மக்களுக்காக உழைப்பேன். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் பாமகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தைக்கு இதுவரை தொடர்புகொள்ளவில்லை" என பேசினார்.

தொடர்புடைய செய்தி