திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில், "2026ல் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி தான் வெற்றி அடையும். அக்கட்சியே ஆட்சியை அமைக்கும். பாமகவினர் இனி வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று களப்பணியாற்ற வேண்டும்" என பேசினார். இந்த பொதுக்குழுவில் பொருளாளர் திலகபாமா, பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.