PM சூர்யா கர் திட்டம்: மாதம் 150 யூனிட் வரை இலவச மின்சாரம்

பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் மூலம், சிறிய வீடுகளுக்கு தேவையான 1 கிலோவாட் கூரை சோலார் அமைப்பை ரூ.30,000 அரசு மானியத்துடன் ரூ.53,700 செலவில் நிறுவ முடியும். இதன் மூலம் மாதம் 120 முதல் 150 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்து, மின்சாரக் கட்டணத்தில் மாதம் ரூ.1,200 வரை சேமிக்க வாய்ப்புள்ளது. வங்கி கடன் வசதிகளுடன் கிடைக்கும் இந்த சோலார் அமைப்புகளின் மூலம் முதலீட்டை 4 முதல் 6 ஆண்டுகளில் திரும்ப பெறுவதுடன், அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேல் இலவச மின்சாரத்தையும் பெற முடியும்.

தொடர்புடைய செய்தி

✕
✕