பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டாம் - ஓம் பிர்லா

பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டாம் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.,க்கள் குறிப்பாக பெண் எம்.பி.,க்கள் பிரதமரை முற்றுகையிடப் போவதாக வெளியான தகவலை தொடர்ந்து, பிரதமரை வர வேண்டாம் என தான் கூறிவிட்டதாக ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இரு அவைகளிலும் காங்கிரஸ், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பிரதமர் வர மாட்டார் என ஓம் பிர்லா கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: Sansad

தொடர்புடைய செய்தி