பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வருகை: இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இன்று (பிப்.17) மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து, மாலையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி