பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 21) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து விரிவாக ஆராயப்பட உள்ளது. குறிப்பாக, தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது மற்றும் பணவீக்கத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.