கோட்டா ஸ்ரீனிவாசராவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசராவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் மறைவால் வருத்தமடைந்தேன். சினிமாவில் அவர் காட்டிய திறமை மற்றும் பல்துறைத்திறனுக்காக நினைவுகூரப்படுவார். தனது அற்புதமான நடிப்பால் தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்த அவர் சமூக சேவையிலும் ஏழை, எளியவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி