அமைச்சர் மூர்த்திக்கு எதிராக களமிறங்கும் பி.எம்.மன்னன்

திமுக அமைச்சர் மூர்த்திக்கு எதிராக மதுரை கிழக்கு தொகுதியில், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ள பி.எம்.மன்னனுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மன்னன், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட 500 பேர் அண்மையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலையில், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தியை எதிர்த்து மன்னனுக்கு வாய்ப்பு வழங்க அதிமுக தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி