ஈரானிய ராணுவ தளபதி காசெம் சுலைமானி கொலைக்கு பழிவாங்க, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பை கொலை செய்ய திட்டமிட்ட ஈரான் நாட்டின் IRGC பிரிவை சேர்ந்த முகமது பாகர் சாத் தாவூத் என்ற பயங்கரவாதியை FBI அதிகாரிகள் கைது செய்துள்ளனர். துருக்கியில் பிடிபட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடமிருந்து இவான்காவின் புளோரிடா இல்ல வரைபடம் மற்றும் சதி திட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.