அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இந்து கோயில் மீது துப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்டதாக 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்து, அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். அரோரா பகுதியில் அமைந்துள்ள இந்து கோயிலை குறிவைத்து அந்த இளைஞர் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்த நிலையில், ரகசிய தகவலின் பேரில் போலீசார் உரிய நேரத்தில் தலையிட்டு அதனை முறியடித்துள்ளனர்.