மனிதர்களைப் போலவே இரவில் தூங்கும் தாவரங்கள்

சில தாவரங்கள் மனிதர்களைப் போலவே இரவில் தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளன என்பது வியப்பூட்டும் உண்மை. பகல் நேரத்தில் சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்ள விரிந்து இருக்கும் இலைகள், இரவு வந்தவுடன் மடங்கி மூடிக்கொள்கின்றன. இந்த இயக்கம் நைக்டினாஸ்டி (Nyctinasty) என்று அழைக்கப்படுகிறது. இது தாவரங்களுக்கு நீர் இழப்பை குறைக்கவும், குளிர் மற்றும் பூச்சிகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகிறது. தாவரங்களும் இயற்கையின் நேரத்தைப் பின்பற்றும் உயிர்கள்தான் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

தொடர்புடைய செய்தி