ரூ.57.80 கோடி மதிப்பில் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்க திட்டம்

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறைப் பயிற்சியின் மூலம் கற்றுத் தேர்வதற்கு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் செயல்படுகிறது. இந்நிலையில், “வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும்” என அமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், “முதற்கட்டமாக, 2024-25ஆம் கல்வியாண்டில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயா்த்தப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி