பகுதியளவு பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரிசர்வ் வங்கியின் விதிமுறைதான் காரணம் என்பது ஏமாற்று வேலை என்று முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். "வாக்கு அறுவடை" முடிந்ததும் விவசாயிகளை ஏமாற்றுவது நிர்வாகத் திறமையின்மையா அல்லது திட்டமிட்ட சதியா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், விவசாயிகளுக்கு தவெக அரசு பச்சைத் துரோகம் செய்துள்ளதாகத் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.