அகமதாபாத்தில் நேற்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இதில் விஸ்வக்குமார் என்பவர் மட்டும் உயிர்தப்பினார். இந்நிலையில், பூமி சௌஹான் என்ற பெண் 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விபத்துக்குள்ளான விமானத்தை தவறவிட்டுள்ளார். போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரால் நேரத்திற்கு விமானநிலையத்திற்கு செல்ல முடியவில்லை. விபத்து செய்தியை அறிந்த அவர் அதிர்ச்சியில் உறைந்ததாகவும், கணபதி பாப்பா தன்னை காப்பாற்றியதாகவும் கூறியுள்ளார்.