குஜராத்: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான காரணம் தெரிய வந்துள்ளது. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு பகல் 1.17 மணிக்கு போயிங் 787 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தின் பின்புறம் மரத்தில் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள மேகானி நகரில் விமானம் விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானத்தில் 12 ஊழியர்கள் உட்பட 242 பயணிகள் பயணித்துள்ளனர்.