குஜராத்: அகமதாபாத் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து இதுவரை 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, 80% மீட்புப் பணிகள் முடிந்துள்ளதாக குஜராத் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.