அகமதாபாத் ஏர் இந்திய விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விஜய்யின் தவெக சார்பில் விருது வழங்கும் விழாவின் 3வது கட்ட நிகழ்வு இன்று (ஜூன் 13) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத் விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்து, நடிகர் விஜயின் கோரிக்கைக்கு இணங்க மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.