குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மருத்துவ கல்லூரி ஹாஸ்டல் மீது விமானம் விழுந்து தீப்பிடித்தபோது, தீயிலிருந்து தப்பிக்க ஹாஸ்டல் மாடியில் இருந்து மாணவர்கள் கீழே குதித்துள்ளனர். இந்த பதைபதைக்க வைக்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
நன்றி:சன் நியூஸ்