ஒடிசாவில் விமான விபத்து.. 6 பேர் காயம்

ஒடிசா மாநிலத்தில் ரூர்கெல்லா அருகே உள்ள ரகுநாத்பாலி பகுதியில் ஒரு சிறிய விமானம் இன்று (ஜன., 10) விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். 9 இருக்கைகள் கொண்ட அந்த விமானம் ரூர்கெல்லாவிலிருந்து புவனேஸ்வருக்குப் புறப்பட்ட நிலையில், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி