விமான விபத்து - உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விசாரிக்க மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு இன்று (ஜூன் 16) கூடுகிறது. எதிர்காலத்தில் விமான விபத்துக்களை தடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த 12ஆம் தேதி நடந்த கோர விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில், உயர்மட்டக்குழு இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறது.

தொடர்புடைய செய்தி