அகமதாபாத் விமான விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது X பக்கத்தில், "குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகள், விமானப் பணியாளர்களுடன் லண்டனுக்கு செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மதியம் 1:44 மணியளவில் இயந்திரக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதாக வரும் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள அனைவரும் விரைவில் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.