குஜராத், அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று (ஜூன் 12) விபத்துக்குள்ளானது. இதில் 53 பிரிட்டன் நாட்டினர் உட்பட 242 பேர் பயணித்ததை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தனது எண்ணங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.