குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் இன்று லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது வரை 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.