தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், அனைத்து இவிஎம், விவிபேட் எந்திரங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் எனத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் விவிபேட் சீட்டுகள் கருப்பு உறைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் தொடர்பான நீதிமன்றப் புகார் மனுக்கள் இறுதி செய்யப்படும் வரை இந்த எந்திரங்கள் தேர்தல் ஆணைய பாதுகாப்பு நெறிமுறைப்படி தொடர்ந்து காப்பறையிலேயே இருக்கும் என்றும் கூறியுள்ளார்