ரேஷன் கடைகளில் அயோடின் உப்பு வழங்க திட்டம்

ரேஷன் கடைகளில் இரும்பு சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 52 விழுக்காடு பேர் போதிய இரும்புச் சத்து இல்லாமல் ரத்த சோகையுடன் இருப்பதாகவும், இதை தடுக்கவே இந்த உப்பு பாக்கெட்டுகள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி