டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச.1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நடக்க உள்ளது. இதில், சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, புதிய உயர்கல்வி ஆணையம் அமைப்பது, கார்ப்பரேட் சட்ட திருத்த மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.