இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகிவிட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இதுதொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கும் அவர் நேர்காணல்களை அளித்தார். இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அரசியின் கொள்கை ரீதியிலான முடிவுகளை வர்த்தகத்துறை மந்திரி நாடாளுமன்றத்திற்கு வெளியே அறிவித்தது உரிமை மீறல் என்று திமுக எம்பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.