'பிங்க்' ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை

சென்னை: பெண்களுக்கான இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவதாக எழுந்த புகாரை அடுத்து, சமூக நலத்துறை குழு ஆய்வு செய்தது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, இந்த ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும். இந்த விதிகளை மீறி ஆண்கள் தொடர்ந்து இயக்குவது கண்டறியப்பட்டுள்ளது. மீண்டும் மீறினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி