அகமதாபாத் விபத்துக்கு விமானியே காரணம்.. வெளியான பரபரப்பு அறிக்கை

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமல்ல, விமானியின் செயல்பாடே காரணம் என இத்தாலி நாளிதழ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. விமான எஞ்சினுக்கான எரிபொருள் விநியோக ஸ்விட்ச்சை விமானி சுமீத் சபர்வால் வேண்டுமென்றே அணைத்ததே விபத்துக்கு காரணம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் ஆய்வில், இந்த ஸ்விட்ச் தானாக ஆஃப் ஆக வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி