அர்ஜெண்டினாவில் 22 வயது மாணவிக்கு நடுவானில் பயிற்சி அளித்த 42 வயது பயிற்சியாளர் லியாண்ட்ரோ, திடீரென விமானக் கதவைத் திறந்து குதித்து தற்கொலை செய்தார். குதிக்கும் முன், "உனக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும்" எனக் கூறியுள்ளார். எனினும், அந்த மாணவி சாமர்த்தியமாக விமானத்தைத் தரையிறக்கி உயிர் தப்பினார். பயிற்சியாளரின் இந்த விபரீத முடிவு குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.