கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் பிலிப்பைன்ஸ் எரிபொருள் அவசரநிலையை அறிவித்துள்ளது. பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால், லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் அங்கும் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில், தற்போதைய சூழலை கொரோனா காலகட்டத்துடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.