சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வு பணியில், பழங்கால செங்கல் கட்டுமான சுவரின் தொடர்ச்சி புதியதாக கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் துறை இயக்குநர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே குழிகள் தோண்டி ஆராய்ந்தபோது, இந்தச் சுவர் மேற்கே வந்து வலதுபுறமாகத் திரும்பி 'ட' (L) வடிவில் அமைந்திருப்பது தெரியவந்தது. இப்பகுதியிலிருந்து தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் மேலும் பல முக்கியத் தொல்பொருட்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.