தனியார் துறை ஊழியர்களின் EPFO பங்களிப்பிற்கான கட்டாய சம்பள உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள். முன்னதாக 2014-ம் ஆண்டில் இந்த வரம்பு ரூ.6,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளது.