தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 2025–2026ம் ஆண்டிற்காக 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு, இந்த வட்டி தொகை 2025–2026ம் ஆண்டிற்கான காலத்திற்கு 7 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பி.எப் பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.