பீஹாரின் சீதாமரியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காவலர் ஒருவர் தனது வாகனத்திற்கு ரூ.120 மதிப்பில் பெட்ரோல் நிரப்ப கேட்டுள்ளார். ஆனால், ஊழியர் தவறுதலாக ரூ.720 மதிப்பிலான பெட்ரோலை நிரப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர், ஊழியரை அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிலர், மேலாளருடன் சேர்ந்து காவலரை தாக்கியுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரல் ஆனதால் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:NDTV