ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே சரிந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.20-மும், டீசல் விலை ரூ.7.38-மும் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.