எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த விலை உயர்வானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. அந்த வகையில் நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் ஒரு லிட்டர் ரூ.113.8க்கு விற்கப்படுகிறது. மேலும் குறைந்தபட்சமாக அந்தமான் தீவில் ஒரு லிட்டர் ரூ.85.73க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று 82 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.104.49க்கு விற்கப்படுகிறது.