“மக்களின் உழைப்பை தவணை முறையில் சூறையாடுகிறார்கள், இந்தக் கொள்ளையின் தவணைகள் யார் யாருக்குச் செல்கிறது?” என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “நீங்கள் ஏன் இவ்வளவு சமரசம் செய்து கொள்கிறீர்கள்?. சர்வதேச சந்தையில் விலை குறைவாக இருந்தபோது, அதன் பலன்களை மக்களுக்கு அளிக்காமல் மக்களை கடுமையாகச் சுரண்டினார்கள். நெருக்கடி இருக்கும்போது, பாஜக தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டார்கள்” என்றார்.