நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 2.46 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2.57 ரூபாயும் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் உயர்ந்துள்ளன. இதனால் சென்னையில் பெட்ரோல் ரூ.108.01க்கும், டீசல் ரூ.99.78க்கும் விற்பனையாகிறது. மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலர்களை கடந்துள்ளது. இதனால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.