நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று (மே 23) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 91 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.105.31க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.96.98க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் எரிபொருள் விலை உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
நன்றி: புதிய தலைமுறை